கைதுகளுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகளுடன் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் தொடர்பாக சஜித் மிக அக்கறையுடன் பேசிவருகின்றார். கடந்த அரசாங்கத்தில் இவர்கள் கைது செய்யப்படும் போது ஐ.தே.க.வின் பிரதி தலைவர் பதவியை வகித்த அவர் அமைதியையே காத்து வந்தார். கடந்த அரசாங்கத்தில் தோட்டப்புறக் காணிகள் பல தனியார் துறைக்கு ஒப்படைக்கப்பட்டன.

இதனால் தோட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இவற்றை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி உறுப்பினர்களை கைது செய்வதால் அராங்கத்திற்கு எந்த வரப்பிரசாதமும் கிடைக்கப் போவதில்லை. அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

எதிர்வரும் பொது தேர்தலின் போது 19ஆவது திருத்தத்தை மாற்றி அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக முழு முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!