யாழ். செல்கிறார் ஜனாதிபதி

வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி காேத்தாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே இதனை தெரிவித்தார். வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். தோட்டப்புற மக்கள் மற்றும் வட மாகாண மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!