சவுதி இளவரசியின் புகைப்படத்தை எதற்காக வெளியிட்டீர்கள்? – சர்ச்சையில் சிக்கிய நாளிதழ்

சவுதி அரேபியாவில் வருகிற ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதியில் பிரபலமான வோக் அரேபியா என்ற நாளிதழ் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத்தின் புகைப்படத்தை, ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது.

அரபு நாட்டின்பெண்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த புகைப்படம் என இந்த நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், கார் ஓட்ட அனுமதி வழங்கவேண்டும் என அந்நாட்டு பெண்கள் போராடியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடியவர்களை சிறையில் அடைத்த அரச குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை எதற்காக வெளியிட்டுள்ளீர்கள்.

போராடிய பெண்கள், பலர் இருக்கையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்து பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டது ஏற்புடையதல்ல என சவுதி நாட்டவர் அந்த நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!