சிறிசேனவை ஆதரித்தவர்களே 100 நாள் வேலைதிட்டத்தினை முன்னெடுத்தனர்

100 நாள் வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தவர்களே முன்வைத்தனர் அந்த திட்டம் ஐக்கியதேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்தை சமீபத்தில் ஜனாதிபதி விமர்சித்திருந்த நிலையிலேயே இன்று ஹரீன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

மைத்திரி நிர்வாகமும் நூறு நாட்களில் புதிய தேசம் என்ற சுலோகத்தையே நாங்கள் அந்த நாட்களில் பிரச்சாரம் செய்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக அணிதிரண்ட அனைத்து தரப்பினரும் இணைந்து இதனை உருவாக்கினர் என அவர் தெரிவித்துள்ளார்.

2015 8 ம் திகதி மௌனப்புரட்சி மூலம் அன்றைய அரசாங்கம் வீழ்த்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி மாத்திரம் பொதுவேட்பாளரை நிறுத்த முயலவில்லை அதேபோன்று அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தவேண்டும் என்பது ஐக்கியதேசிய கட்சியின் விருப்பம் மாத்திரமல்ல எனவும் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது அன்றைய அரசாங்கத்தை எதிர்த்த அனைவரினதும் முடிவு ஆனால் ஐக்கியதேசிய கட்சி பொதுவேட்பாளரை ஆதரித்தது எனவும் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மக்கள் பொதுவேட்பாளரை ஆதரித்தனர் என்பது உண்மை அவரை அவர்கள் ஆதரித்தனர் என்பதை விட 100 நாள் வேலை திட்டத்தை அவர்கள் ஆதரித்தனர் எனவும் ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!