மங்களவுக்கு ஐதேக உதவித் தலைவர் பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின உதவித் தலைவராக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

2018 ஏப்ரல் 26ஆம் நாளிடப்பட்ட, நியமனக் கடிதம், அன்றைய நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், மங்கள சமரவீரவிடம் வழங்கப்பட்டுள்ளது.

செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் , ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின் 7.1(1) பிரிவின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!