கோத்தாவின் பாதையில் செல்ல மறுக்கிறார் வாசுதேவ

கோத்தாபய ராஜபக்சவின் வியத் மக திட்டத்துக்கு தாம் ஆதரவு அளிக்கவில்லை என்றும், அது தமது பாதை அல்ல என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“அண்மையில் நடந்த வியத் மக கருத்தரங்கின் போது, சில பேச்சாளர்கள் வெளிப்படுத்திய கருதுக்களுடன் இணங்க முடியாது.

கூட்டு எதிரணியில் உள்ள சிலர் அவருடன் இணங்கிப் போகின்றனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். சிறிலங்கா அதிபர் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!