வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படலாம் இலங்கை அரசு தெரிவிப்பு.

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும்.”என கோட்டாபய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிக்கையில்

வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்படுவது தொடர்பில் ராஜபக்ச அரச தரப்பைச் சேர்ந்தவர்களும், கடும்போக்கு இனவாதிகளும் போர்க்கொடி தூக்கியிருந்தனர். சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!