பெண்ணுக்கு உதட்டு முத்தம் கொடுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!

வெளிநாட்டு பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுடனான கலந்தாய்வின் போது அனைவர் முன்னிலையிலும் வைத்து பெண் ஒருவருக்கு உதட்டு முத்தம் கொடுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உலக மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டு தலைவர்கள் உத்தியோகபூர்வ பயணமாக தென்கொரியாவில் உள்ள சியோல் நருக்கு சென்றுள்ளனர்.

தென்கொரியாவில் இருக்கும் வெளிநாட்டு பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுடன் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உரையாடினார். இந்த சந்திப்பு வழக்கமாக நடக்கும் ஒன்றாகும். இதன்போது தென்கொரியா நாட்டவர்களும் அதில் கலந்துகொண்டனர். இதில், மேடையில் நின்று ஜனாதிபதி உரையாடிக்கொண்டிருக்கையில், இரண்டு பெண்களை மேடைக்கு அழைத்து சற்று நகைச்சுவையாக உரையாடலை கொண்டுபோக முயற்சித்து அவர்களிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

இறுதியில், மேடைக்கு வந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்ணிடம், நீ இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லையா? அல்லது உனது கணவனை விட்டு பிரிந்துவிட்டாயா? என கேள்விகளை கேட்டுவிட்டு இதனை ஒரு ஜோக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறி அந்த பெண்ணிற்கு உதட்டு முத்தம் கொடுத்துள்ளார். இவர் இவ்வாறு செய்வதை அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். ஆனால் தென்கொரிய நபரை திருமணம் செய்துள்ள அப்பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் இந்த மோசமான செயல், அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த செயல் அறுவெறுக்கத்தக வகையில் உள்ளது என சமூகவலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகவலைதளங்களில் இவருக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஜனாதிபதி அலுவலகம் இதுகுறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!