ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்: – குடும்பத்தார் செய்த நெகிழ்ச்சி செயல்

இந்தியாவில் காதலுக்காக கெளரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தார் இப்தார் விருந்து அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அங்கித் சக்சேனா என்பவர் ஷெஸாதி என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு ஷெஸாதி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் திகதி அவர் குடும்பத்தினர் அங்கித்தை கொலை செய்தனர்.

இந்த கொலையை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவிய நிலையில் அங்கித்தின் குடும்பத்தார் இதை மத சண்டையாக மாற்ற வேண்டாம் என கோரிய நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது 4 மாதங்கள் கழித்து அமைதி வேண்டி அங்கித்தின் குடும்பத்தினர் தங்கள் பகுதியில் இப்தார் விருந்தளித்துள்ளனர். இது குறித்து கூறிய அங்கித்தின் தந்தை யஷ்பால், இந்த இர்பார் விருந்துக்கு அனைத்து தரப்பிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

எங்கள் எண்ணம் ஒன்று தான், எங்களுக்கு நாங்கள் வாழும் பகுதியில் அமைதி நிலவ வேண்டும், எனக்கு எந்த மத நம்பிக்கையை சேர்ந்தவர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. தொடர்ந்து இந்த அறக்கட்டளை சார்பாக விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகளைகளும் கொண்டாடப்படும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!