நாடாளுமன்ற தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிப்பு ?

நாடாளுமன்ற தெரிவு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை இன்றைய அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிக்கவுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் செயலிழந்த அனைத்து குழுக்களுக்குமான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்து அனைத்து கட்சிகளும் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய தெரிவுகுழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டவுடன் தெரிவுகுழு கூட்டம் இடம்பெற்று புதிய தெரிவு குழுக்களுக்கான தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மேலும் ,கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து கோப் குழு, அரச கணக்காய்வு குழு உள்ளிட்ட 10 குழுக்கள் செயலிழந்தன.என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!