யானை சின்னம் இன்றி போட்டியில்லை – நவீன்

யானை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு , சின்னத்தை மாற்றுவது தொடர்பில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடமளிப்பார் என்றும் , புதிய சின்னத்தில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் அதனை பழக்கப்படுத்த காலம் எடுக்கும் என்றும் இதனால் கிடைக்கவுள்ள வாக்குகளை கூட இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெருந்தோட்ட மக்கள் யானை சின்னத்தில் வாக்களிக்க பழகியுள்ளதால் வேறு சின்னத்தை முன்வைத்தால் குழப்ப நிலை தோன்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!