பிரதமர் மஹிந்தவினால் நாட்டுக்கு கெட்ட பெயர்!

அரசாங்கத்திடம் கடன் தவணையை செலுத்த கால அவகாசம் கேட்டதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரிய பொருளாதாரப் பிரச்சினை இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் வெளிநாடுகளுக்கு பாரியதொரு தொகை கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணையை குறிப்பிட்டதொரு காலத்துக்கு பிற்படுத்தி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்ற கடனை உரிய தவணைக்கு செலுத்த முடியாத நாடு என்ற பெயர் சர்வதேசத்துக்கு இதன்மூலம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. பிரதமரின் இந்த நடவடிக்கையால் கடன் உதவிகளை தந்திருக்கும் ஏனைய நாடுகளும் தற்போது அச்சமடைந்து கடனை விரைவாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும். என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!