தனிமைப்படுத்தப்பட்டிருந்த சீனர்கள் மீண்டும் பணியில் இறங்கினர்!

கொரோனா வைரஸ் தொற்று பீதியை அடுத்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த சீன பணியாளர்கள் மீண்டும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு போட்சிட்டி, லோட்டஸ் கோபுரம், பொலன்னறுவை சிறுநீர விசேட மருத்துவமனை, மொரகஹாகந்த நீர்த்தேக்கம் போன்ற இடங்களில் சீன பணியாளர்கள் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.இவர்களில் பலர் சீன புதுவருடத்துக்காக நாட்டுக்கு சென்று திரும்பியபோதே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பீதியும் ஏற்பட்டது.

இதனையடுத்து நாடு திரும்பிய அவர்களில் பலரும் பொது மக்களின் வசிப்பிடங்களுக்கு அப்பால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் அவர்கள் ஆரோக்கியமான உடல்நிலையுடன் தற்போது தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு போட்சிட்டியில் 800 சீன பணியாளர்கள் பணியாற்றினர். அவர்கள் தமது பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.லோட்டஸ் கோரத்தின் திறப்பு பணி இரண்டு மாதங்களுக்கு பின்தள்ளி வைக்கப்பட்டுள்ளமையால் அங்கு பணியாற்றும் சீன பணியாளர்கள் இன்னும் நாட்டுக்கு திரும்பவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!