உதிரியாக விற்கப்படும் இனிப்புகளில் இனி காலாவதி தேதி கட்டாயம்!

பாக்கெட்டில் அடைக்காமல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது. தயாரிப்பு தேதி மற்றும் எந்த தேதி வரை சாப்பிட உகந்தது என்று குறிப்பிடுவது வருகிற ஜூன் மாதம் 1ந்தேதியில் இருந்து கட்டாயம் ஆக்கப்படுகிறது.இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.

கண்ணாடி பெட்டியிலோ,தட்டிலோ வைக்கப்படும் உதிரி இனிப்புகளிலும் மேற்கண்ட விவரங்கள் எழுதி வைக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது. இந்த விதிமுறைகடைபிடிக்கப்படுவதை உணவு பாதுகாப்பு ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!