அஞ்சல் வாக்களிப்பு – ஆவணங்களை தயார்படுத்த உத்தரவு!

பொதுத்தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கவுள்ள வாக்காளர்கள் அது குறித்த ஆவணங்களை உடனடியாக தயார்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தகவல்களை கிராம அலுவலர்கள் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2019 ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாக மாவட்டம், வாக்களிப்பு பிரிவின் பெயர், வாக்காளரின் முழு விபரம், தனது பெயருக்குரிய தொடரிலக்கம் உள்ளிட்ட தகவல்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கவுள்ள வாக்காளர்கள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!