கர்ப்பமாக இருக்கும் காதலியை கரம்பிடிக்கிறார் பிரித்தானியப் பிரதமர் ஜோன்ஸன்.!! இது மூன்றாவது திருமணமாம்..!

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (55) தன்னை விட 34 வயது குறைந்த காதலியை 3வதாக திருமணம் செய்யவுள்ளார்.

பொரிஸ் ஜோன்சன் தற்போது கரி சைமண்ட்ஸ் (31) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் சேர்ந்து வாழ்கிறார்.லண்டனில், எண். 10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் குடியேறிய முதல் பிரதமர் ஜோடி என்ற பெயர் பொரிஸ் ஜோன்சன் ஜோடிக்கு கிடைத்துள்ளது.

இதேபோன்று கடந்த பல நூற்றாண்டுகளில் ஒரு பிரதமரின் மிக இளம்வயது வாழ்க்கை துணைவி என்ற பெயரை கரி சைமண்ட்ஸ் பெற்றுள்ளார்.இங்கிலாந்தின் 200 ஆண்டு கால வரலாற்றில் பிரதமர் பதவியில் இருந்தவாறு திருமணம் செய்து கொள்ளப்போகிற முதல் பிரதமர் என்ற பெயரையும் பொரிஸ் ஜோன்சன் பெறுகிறார்.
தற்போது கரி சைமண்ட்ஸ் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு அடுத்த சில மாதங்களில் குழந்தை பிறக்க உள்ளது. இந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள பொரிஸ் ஜோன்சன் முடிவு செய்து, அதற்கான நிச்சய நிகழ்ச்சி நடந்துள்ளது. இதை கரி சைமண்ட்ஸ், சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் கரி சைமண்ட்ஸ் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் திருமணமா, பெறுவதற்கு முன்னரே திருமணமா என்பது தெரிய வரவில்லை.

இருப்பினும், பிரதமர் பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றுக்கொள்வதில் பொரிஸ் ஜோன்சன் தம்பதியருக்கு முதல் தம்பதியர் என்ற தகுதி கிடைக்காது. ஏற்கனவே இங்கிலாந்தில் பிரதமர் பதவி வகித்தபோது டேவிட் கமரூன், சமந்தா தம்பதியருக்கு 2010ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.பொரிஸ் ஜோன்சனை பொறுத்தமட்டில் அவர் மூன்றாம் திருமணம் செய்ய உள்ளார். முதல் மனைவி அலெக்ரா மொஸ்டின் ஒவனுடன் 1987-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து, 1987ல் திருமணம் செய்து கொண்டனர். 6 ஆண்டுகளில் அந்த திருமணம் முறிந்து போனது.

1993ம் ஆண்டு, சட்டத்தரணியான மெரினா வீலர் என்ற பெண்ணை பொரிஸ் ஜோன்சன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இளம்வயது முதல் நண்பர்களாக இருந்து, திருமண வாழ்வில் இணைந்த இவர்களுக்கு 4 குழந்தைகள். ஆனாலும் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2018-ல் பிரிந்து விட்டனர்.அதைத் தொடர்ந்துதான் கரி சைமண்ட்சுடன் பொரிஸ் ஜோன்சன் பழக ஆரம்பித்து, அவர் கர்ப்பமாக உள்ளார். அவருடன் மூன்றாவது திருமணம் நடைபெற உள்ளது.இந்த கரி சைமண்ட்ஸ், கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர், 2010-ம் ஆண்டு லண்டன் மேயர் தேர்தலில் பொரிஸ் ஜோன்சனுக்காக பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!