சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாத வண்ணம் உடனடியாக தலையீடு செய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கருஜயசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் மற்றும் சஜித் தரப்பினர் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், சஜித் தரப்பு சார்பாக ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதுடன், ரணில் தரப்பு சார்பில் ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், தயா கமகே மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருதரப்பும், எதிர்வரும் தேர்தலில் ஐக்கியத்துடன் போட்டியிடாத பட்சத்தில், தாம் இருதரப்புக்கும் தனது ஆதரவை வழங்குப் போவதில்லை என சபாநாயகர் கருஜயசூரிய இதன்போது கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சிகயைப் பாதுகாக்கும் வகையில், ஒற்றுமையாக செயற்படுமாறு தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும், எனினும் இருரப்பும் இதுவரை இணக்கப்பாட்டுக்கு வரவில்லை எனவும் சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!