கொரோனா அச்சுறுத்தல்: வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு ஊழியர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அறிவுறுத்தல்!

உயிர்கொல்லி கொரோனாவிடம் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3,100-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, ட்விட்டர் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டாம். தங்களது வீடுகளில் இருந்தே பணிபுரியுங்கள் என்று Twitter நிறுவனம் ஊழியர்களை கேட்டு கொண்டுள்ளது.

இது குறித்து கூறியுள்ள Twitter நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் ஜெனிபர் கிறிஸ்டி, உலக அளவில் உள்ள அனைத்து ஊழியர்களும் முடிந்த அளவிற்கு வீட்டிலிருந்தே வேலை செய்வதை நாங்கள் வெகுவாக ஊக்குவிக்கிறோம். COVID-19 வைரஸ் பரவுவதற்கான விகிதத்தை குறைப்பதே எங்கள் குறிக்கோள் என்று குறிப்பிட்டார். தென் கொரியா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள Twitter அலுவலக பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயமாக இருக்கும் என்றும் கிறிஸ்டி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!