பயங்கரவாதிகளின் வர்த்தத்தில் தொடர்பில்லை – மறுத்தார் கபீர்

துருக்கி பயங்கரவாத அமைப்பின் வர்த்தகத்தில் முன்னாள் ஐதேக எம்பி கபீர் ஹாஷிமுக்கு தொடர்பு உள்ளது என்று சிங்கள ஊடகம் வெளியிட்ட செய்தியை இன்று மறுத்துள்ள கபீர், சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதால் ஐதேகவின் சிலரால் இந்த சதி செய்யப்பட்டிருக்கலாம் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனநாயக்க மற்றும் அமைச்சின் பணிப்பாளர் தம்மிக்க குமாரி ஆகியோர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, “கபீர் ஹாஷிம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் துருக்கியின் சர்வதேச பயங்கரவாத அமைப்பு இலங்கையில் செய்யும் வர்த்தகத்தில் தொடர்பு உள்ளது” என்று தெரிவித்ததாக குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!