மைத்திரி தேர்தலில் களமிறங்குவதற்கு எதிர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத்தேர்தலில் போட்டியிடாது, தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் செல்ல வேணடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவிப்பது என்றும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த சில கருத்துக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தவறான செய்தியை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் கருத்து வெளியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன, தாம் பருந்து போல தாக்கப் போவதாக தெரிவித்திருந்தார். பின்னர், பொலன்னறுவ தமது கூடு என்றும் அதில் வேறெவரும் வந்து முட்டையிட விடமாட்டேன் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கள் மஹிந்த ராஜபக்ச தரப்பை கோபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனையடுத்து முன்னைய அரசாங்கத்தின் ஜனாதிபதியும், பிரதமரும் பருந்துபோல தாக்கி கொண்டமை காரணமாக மக்களே பாதிக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ச தமது கருத்தை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!