புத்தாண்டு நிகழ்வுகளை பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடாது

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும், சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளை தமது பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று, தேசிய தேர்தல்கள் ஆணையகம் எச்சரித்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளில், எந்தவொரு கட்சி அல்லது சின்னம், அல்லது போட்டியிடும் வேட்பாளரின் இலக்கத்தை, பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதானது, நாடாளுமன்றத் தேர்தல் சட்டங்களின்படி, குற்றமாகும் என்று, தேர்தல்கள் ஆணையத்தின் பணிப்பாளர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வேட்பாளரின் ஒப்புதலுடனும் இதுபோன்ற குற்றம் இழைக்கப்பட்டால், குறிப்பிட்ட வேட்பாளர் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் தனது ஆசனத்தை இழக்க நேரிடும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!