இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை வரை, 10 மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக, 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.

இவற்றில் அதிகபட்சமாக, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், போட்டியிடுவதற்கு 6 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றன.

இதையடுத்து, அதிகளவு சுயேட்சைக் குழுக்கள் வன்னி தேர்தல் மாவட்டத்தில், கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இங்கு 5 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 3 சுயேட்சைக் குழுக்களும், கொழும்பு, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் தலா 2 சுயேட்சைக் குழுக்களும், திருகோணமலை, கம்பகா, காலி, நுவரெலிய மாவட்டங்களில் தலா 1 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

மார்ச் 19 நண்பகல் வரை சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!