சீனாவில் சுட்டெரிக்கும் வெயிலில் கார் மேலே மீன் சமைத்த பெண்: – வைரலாகும் புகைப்படம்

சீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் கார் மீது மீனை வைத்து வைக்கிறார். நிலவும் கடும் வெயிலினால் மீன் வேகவைக்கப்பட்டது. காரில் 4-5 மீன்கள் வைக்கப்படுகின்றன. வெயிலில் அவை வெந்து விடுகின்றன.

இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது போன்று பல இடங்களில் வெயிலில் மக்கள் சமைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மீன் சமைக்கப்பட்ட சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!