புவியின் ஒரு நாள் என்பது 25 மணிநேரமாக இருக்கும்: – ஆராய்ச்சியாளர் தகவல்

மனிதர்களுக்கு சில சமயங்களில் ஒரு நாளின் 24 மணி நேரம் என்பது போதாது. பல வேலைகள் நேரமின்மை காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் ஒத்திவைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஒரு நாளில் அதிக மணிநேரம் வேண்டும் என்று நீங்கள் விரும்பியிருந்தால், அதற்கு ஏற்ற சரியான நேரம் இதுதான். ஏன் என்றால் புவியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், புவிக்கு மிக அருகில் நிலவு இருந்ததால், அப்போது புவியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக மட்டுமே இருந்ததாக அமெரிக்காவின் விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார். தற்போது ஆண்டுக்கு 3.82 செண்டி மீட்டர் அளவுக்கு புவியை விட்டு நிலவு தொலைவில் செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், புவியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்றும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!