6000 தேர்தல் கண்காணிப்பாளர்கள் – பெப்ரல் திட்டம்!

பொதுத்தேர்தலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக பெப்ரல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் 40 பேர் இலங்கை வர உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு கையளிக்கும் நாள் தொடக்கம் கண்காணிப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தை சேர்ந்தவர்களும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!