பொலன்னறுவவில் போட்டி – மைத்திரி உறுதி

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குச் செல்லுமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிய ஆலோசனைகளை நிராகரித்துள்ள, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன, பொலன்னறுவ மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலர் தயாசிறி ஜயசேகர நேற்று குருநாகலவில் நடந்த ஊடக மாநாட்டிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.

“முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவ மாவட்டத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் எண்ணம் அவருக்கு கிடையாது.

அடுத்த நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அவருக்கு ஆலோசனை கூறியிருந்தனர்.

ஆனால் சிறிசேன அந்த யோசனைகளை நிராகரித்துள்ளார்” என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!