இணையங்களை முடக்க நேரிடும்! – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என சில இணையத்தளங்களில் வெளியான தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எனக்கு அறிவுறுத்தப்படவுமில்லை, அப்படியான முடிவை ஆணைக்குழு ஆராயவுமில்லை. அந்த இணையச் செய்தி புரளியானது. இவ்வாறான புரளிகளை பரப்பும் ஊடகங்கள் தொடர்பில் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானித்து வருகிறது. கட்டு மீறிப் போகுமிடத்து அந்த இணையங்களை முடக்க நடவடிக்கை எடுக்க நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!