இரண்டு வழிகளில் கொரோனா தடுப்பூசி உருவாக்கலாம் – இந்திய விஞ்ஞானிகள் தகவல்!

கொரோனா வைரஸ்கான தடுப்பூசியை இந்தியா உருவாக்க குறைந்தது ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என மூத்த சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், புனேயில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டியூட்டில் கொரோனா வைரஸ் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் பிரிவின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் -1 (ஈ.சி.டி-ஐ) தலைவர் ராமன் ஆர் கங்ககேத்கர் கூறினார்.

புனேயில் வெற்றிகரமாக 11 பிரித்தெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் உள்ளது. இதை வைத்து முக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ள மிக பயனாக இருக்கும். தடுப்பூசி இரண்டு வழிகளில் உருவாக்கலாம். வைரஸின் மரபணுவை வைத்து ஆன்டிபாடியை உருவாக்கலாம் அல்லது ஸ்டிரெயினை வைத்து தடுப்பூசி உருவாக்க முயற்சிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!