ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் என்ற ஈழத் தமிழ் இளைஞன் வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு, 16,224 வாக்குகள் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட, தேசிய ஜனநாயக கட்சியின் பெலிசியா சாமுவெல், 15,261 வாக்குகளைப் பெற்றார். இவரை, சுமார், 963 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய தணிகாசலம் தோற்கடித்தார்.

42,015 வாக்காளர்கள் வாக்களித்த ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலத்துக்கு 38.61 வீத வாக்குகளும், பெலிசியா சாமுவெலுக்கு 36.32 வீத வாக்குகளும் கிடைத்தன.

இவர்களை அடுத்து, லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றனர்.

ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!