தீவிரமடையும் கொரோனா: மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் மாகாணத்தில் துவங்கி உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸானது இந்தியாவிலும் தற்போது தீவிரமடைந்துள்ளது. கொடிய வைரஸால் தற்போது இந்தியாவில் 451 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய அவர், வெளிநாடுகள் இருந்து வீடு திரும்பியவர்கள் கட்டாயம் தங்களை 26 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவின் ஆபத்துக்களை உணர்ந்து மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கொரோனா வைரஸானது தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக கூறிய அவர், மதுரையில் சிகிசிச்சை பெற்று வரும் நோயாளியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், சமூகப் பரவலை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!