கர்ப்பமான பிரித்தானிய இளவரசி மேகனிற்கு இரட்டை குழந்தைகளா?

இளவரசர் ஹரி, மெர்க்கல் ஆகிய இருவரினதும் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேகன் மெர்க்கலின் வயிறு சற்று பெரிதாக இருக்கும் நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு, மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார்,அதுவும் அவரது வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தைகள் என கூறியுள்ளது.

மேலும், 588 ஆண்டுகளில் முதல் ராயல் இரட்டை குழந்தைகள் என தெரிவித்துள்ள அந்நாளிதழ், இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் ஆகிய இருவரும் ரகசியமாக கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பட்டுள்ளது.

ஆனால், இது பொய்யான தகவல் எனவும் மெர்க்கல் கர்ப்பமானது உண்மையென்றால் அது அரசகுடும்பத்தால் முறையாக அறிவிக்கப்படும், அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் முதல் முறையாக சார்லஸின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மெர்க்கல் கலந்துகொண்டபோது அவரது வயிறு பெரியதாக இருக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!