பேராபத்தில் இருக்கும் இத்தாலி: ஒரே நாளில் 683 பேர் உயிரிழப்பு!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 62 ஆயிரத்து 781 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 3 லட்சத்து 28 ஆயிரத்து 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 802 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலியை இந்த வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது.

இத்தாலியில் இதுவரை 74 ஆயிரத்து 386 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 683 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!