ஊரடங்கை நீடிக்க எடுக்கப்பட்ட முடிவு!- காரணத்தை விபரிக்கிறார் அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் இன்று காலை தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் விளக்கமளித்துள்ளார்.

“யாழ்ப்பாண மாவட்டத்தில் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலே சனச்செறிவு அதிகமாக காணப்படுவதும், கடந்தமுறை ஊரடங்கு சட்ட தளர்வின் போது மக்கள் அதிகமாக கூடியதும், தற்போது கூட சில இடங்களில் பொது மக்கள் அதிகமாக கூடி வருவதுமே, ஊரடங்கை நீடிக்கக் காரணமாகும்.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி தனிமைப்படுத்தலை தொடர்வது, அதே நேரத்திலே சமூக இடைவெளியை பேணுவது என்பதன் அடிப்படையில் நிலைமையை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!