ஊரடங்கு அனுமதிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை!

பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில் தற்போது வாகனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!