ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதுதான் ஒரே நோக்கமா?

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றப் பதவிகளைத் தமக்காக்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இலக்கு என்ன என்பதை அவசரமாக ஆராய வேண்டிய தேவை தமிழ் மக்களிடம் எழுந்துள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விடயத்தை பெரும்பாலான ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துவிட்டன.

அதிலும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் தம்மால் முடிந்த அளவுக்கு அந்தச் சம்பவத்தை அப்படியே விழுங்கி விட்டதைப் பார்க்க முடியும்.

ஆனால் இலங்கைப் பாராளுமன்றத்தில் நடந்த இந்தச் சம்பவம் தமிழினத்துக்கு இழுக் கைத்தரக்கூடியது மட்டுமன்றி தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற செயலாகவும் அமைந்துள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும் இருவர் பிரதி சபா நாயகர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.

இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவரையே பிரதி சபாநாயக ராகத் தெரிவு செய்ய வேண்டும்.

ஏனெனில் தற்போது சபாநாயகராக இருப்ப வர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்தவர் என்ப தால் பிரதி சபாநாயகர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதுதான் நியா யம் என்றார்.

எனினும் இரா.சம்பந்தரின் கருத்தை அவ ரின் தலைமையிலான கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்களே ஏற்றுக் கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தனர்.

இங்கு யாரை ஆதரிப்பது என்பதற்கு அப் பால், பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெறப் போகிறது எனும்போது, யாரை பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்வது என்ற முடிவை கூட்ட மைப்பினர் கூடி எடுக்கவில்லையா? என்பது தான் இங்கு நோக்குதற்குரிய விடயமாகும்.

பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறப் போகி றது. அதில் வாக்களிப்பது அல்லது வெளிநடப் புச் செய்வது என்ற முடிவை ஏலவே கூட்ட மைப்பு எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தர் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோவை ஆதரிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ஆனால் அதேநேரம் இரா.சம்பந்தரின் கருத்தை தூக்கி எறிந்து விட்டு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்கின்றனர்.

இவ்வாறு வெளிநடப்புச் செய்வது என்ற முடிவை கூட்டமைப்புக்குள் எடுத்தது யார்? என்ற கேள்வியினூடு பலத்த சந்தேகங்கள் முன்னெழுந்துள்ளன.

வெளிநடப்புச் செய்வது என்ற தீர்மானத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எடுத் திருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பது என அவர் ஒருபோதும் கூறியிருக்க மாட்டார்.

ஆக, வெளிநடப்புத் தீர்மானம் கூட்டமைப் பின் இன்னொரு தலைவரால் எடுக்கப்பட்டுள் ளது என்பது உறுதியாகிறது.

ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறது என்பது மட்டும் சர்வநிச்சயம்.

இதனை இரா.சம்பந்தர் எதிர்க்கிறார் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!