ஸ்ரீலங்காவில் 3000 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம்! நவீன் டி சொய்சா தகவல்

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 210 பேரிடம் இருந்து தொடுகை மூலமாக சுமார் 3000 பேருக்கு பரவியிருக்கலாம் என்றே கணிப்பிட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 210 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 56 பேர் தற்போது வரை தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளத.

இந்நிலையில், வெறும் 30 நாட்களில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி விட்டதாக அறிவித்தால் அது சாத்தியமாகாது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 210 பேரிடம் இருந்து தொடுகை மூலமாக சுமார் 3000 பேருக்கு பரவியிருக்கலாம் என்றே கணிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், புதுவருடத்தினை வீட்டிலிருந்து குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!