ரஞ்சனுக்கு மறியல் – சற்றுமுன் உத்தரவு!

பொலிஸ் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் நேற்று (13) கைது செய்யப்பட்ட முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்கவை 20ம் திகதி வரை மறியலில் வைக்க நுகேகொடை நீதிமன்ற இன்று (14) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

செல்லுபடியாகும் பாஸ் அனுமதியின்றி சென்ற வாகனம் ஒன்று தொடர்பில் விசாரணை செய்த போது பொலிஸாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகும் போது முகநூல் நேரலையில் தோன்றிய ரஞ்சன் ராமநாயக்க, “தனது வளாகத்துக்குள் நுழைய வாகனம் ஒன்றுக்கு அனுமதி வழங்க மறுத்ததால் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில நாட்களுக்கு முன்னர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அரிசி மூடைகளுடன் வந்த லொரியை எம்பியின் வளாகத்துக்குள் நுழைய பொலிஸார் அனுமதிக்கவில்லை.

இதேவேளை நேற்று முன்னாள் எம்பி பாலித தேவரபெரும முகநூல் பதிவு ஒன்றில் “தனது நிவாரண பணிகளை நிறுத்தி தன்னை கைது செய்யுமாறு” பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!