காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் ரூ. 5,000 கொடுப்பனவு

முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, காத்திருப்பு பட்டியலிலும் உள்ளடக்கப்படாதவர்களுக்கு மேலும் ரூ. 5,000 கொடுப்பனவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இக்கொடுப்பனவை இது வரை பெறாத அல்லது காத்திருப்பு பட்டியலில் இல்லாத ஆனால் கிராமிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 61,615 முதியவர்கள், 14,195 விசேட தேவையுடையவர்கள் மற்றும் 5,884 சிறுநீரக நோயாளிகளுக்கு ரூ. 5,000 கொடுப்பனைவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுகள் இன்றையதினம் (15) கிராம சேவகர்களால், குறித்த பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (15) பெண்கள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி ஏ.எஸ்.எம்.எஸ். மகானாம, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!