பராகுவே நாட்டில் இறுதிச்சடங்கின் போது விழித்தெழுந்த சடலம்!

பராகுவே நாட்டில் இறுதிச்சடங்கு முன்னெடுக்கப்படும் கடைசி நிமிடத்தில் பிணப்பைக்குள் இருந்து அலறிய பெண்ணால் அந்த இல்லம் களேபரமானது. தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் குறித்த பெண்மணி இறந்ததாக கூறி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நிலையிலேயே அவர் இறுதிச்சடங்கு நடக்கும் இல்லத்தில் கண் விழித்துள்ளார். 50 வயதான கிளாடிஸ் என்பவர் கருப்பை புற்றுநோயால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். சனிக்கிழமை பகல் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரித்ததை அடுத்து சான் பெர்னாண்டோ சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பொலிசாரின் தகவலின் படி, குறித்த பெண்மணி உள்ளூர் நேரப்படி பகல் 9.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் சுமார் 11.30 மணி அளவில் கிளாடிஸ் இறந்துவிட்டதாக அவரது கணவருக்கும் மகளுக்கும் தகவல் அளித்துள்ளார்.

மட்டுமின்றி கிளாடிஸ் கருப்பை புற்றுநோய் காரணமாகவே இறந்துள்ளார் என உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பிணப்பைக்குள் அடைக்கப்பட்ட சடலத்தை குடும்பத்தார் இறுதிச்சடங்கு நடைபெறும் இல்லத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே கிளாடிஸ் திடீரென்று சுய நினைவுக்கு திரும்பியதும், பிணப்பைக்குள் அடைபட்டிருப்பதைக் கண்டு அலறியதும்.

தமது தாயாரை காப்பாற்றுவதற்கு பதில் அந்த மருத்துவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளது உண்மையில் அந்த மருத்துவர் மீது சந்தேகம் ஏற்படுவதாக கிளாடிஸின் மகள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரை பராகுவே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!