கொரோனா போர்வையில் வடக்கு பாடசாலைகளில் முகாமிடும் படையினர்!

வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று பாடசாலைகள் படையினரின் தேவைக்காக வழங்கப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதகல் நுணசை வித்தியாலயத்தில், நேற்று பெருமளவு கடற்படையினர் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். இதனால், இங்கு கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

எனினும், ஊடுருவலைத் தடுப்பதற்காக மேலதிக கடற்படையினரை தங்க வைப்பதற்காகவே, இந்தப் பாடசாலை பயன்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக கடற்படையினரைதங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் விமானப்படை மற்றும் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாண கல்வி அமைச்சு கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!