ஈராக்கில் நடந்த கொடூர சம்பவம்: அழகிய மனைவியை உருகுலைத்த கணவன்!

ஈராக்கில் பெண் ஒருவர் மோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் வலியை தாங்க முடியாமல் இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அந்த பெண்ணை அவரின் கணவரே பெட்ரோல் ஊற்றி எரித்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் Najaf நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க Malak Haider al-Zubaidi என்ற 20 வயது பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகள் செயல்பாட்டினை இழந்ததால், அவர் பரிதாபமாக இறந்துவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அவர் இறப்பதற்கு முன், முகத்தில் தீக்காயங்களுடனும், உடல் முழுவதும் பேண்ட்டேஜ்களால் சுற்றப்பட்டு, வலியால் கடும் அவதிப்படுவதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இவரின் மரணத்திற்கு முக்கிய காரணம், அவரின் கணவனான Mohammed Al Mayahli என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸ் அதிகாரியான இவரின் குடும்பம், முதலில், மருத்துவமனையில் இருந்த போது, Malak Haider al-Zubaidi -ஐ மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, பொலிஸ் விசாரணையின் போது, இது ஒரு விபத்து என்று கூறி தவறான அறிக்கையை அளித்துள்ளதாக ஈராக்கிய வழக்கறிஞர் Hayan al-Khayay கூறியுள்ளார்.

கணவரின் குடும்பத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றியுள்ளார். அதில், அவர் தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர் தொலைப்பேசி சார்ஜர் மூலம் அடித்தது மட்டுமின்றி, பெட்ரோல் ஊற்றி எரித்து தூக்கி எறிந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதையடுத்து, Mohammed Al Mayahli மற்றும் அவரின் குடும்பத்தினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதாவது , Mohammed Al Mayahli சமூகவலைத்தளத்தில், இந்த தாக்குதலை மறுத்துள்ளதுடன், மனைவியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இவரின் தந்தை இராணுவத்தில் இருந்ததால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி தப்ப முயற்சிப்பதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, இவரின் குடும்பத்தினர் மனைவியிடம் மிகவும் அவதூறாக நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாக அனைத்து தொடர்புகளும் எட்டு மாதங்களாக துண்டிக்கப்பட்டதால், மன உளைச்சலில் இருந்த இவர் இந்த செயலை இப்படி செய்துவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முழு விசாரணைக்கு பின்னரே உண்மை என்னவென்று தெரியவரும். இருப்பினும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் வலி தாங்கமுடியாமல் போராடிய Malak Haider al-Zubaidi-ன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், பலரும் அவரின் கணவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!