அரசியல் விவாதம் செய்ய சரியான தருணம் இதுவல்ல- நாமல் தெரிவிப்பு

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை நாடு எதிர்த்துப் போராடிவரும் நிலையில் அரசியல் பற்றி விவாதிப்பற்கு இது சரியான தருணம் அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் வேகமாக பரவுவதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்தான பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!