1000 சடலப் பைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் கோரியுள்ள அரசாங்கம்!

கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை பொதி செய்வதற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் இருந்து ஆயிரம் சடலப் பைகளை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலர் மருத்துவ கலாநிதி சுனில் டி அல்விஸ், இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுபவர்களின் சடலங்களை பொதியிடுவதற்காகவே, சர்வதேச நியமங்களின்படி தயாரிக்கப்பட்ட சடலப் பைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியிருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலர் மருத்துவ கலாநிதி சுனில் டி அல்விஸ், தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சுகாதார அமைச்சின் இந்தக் கோரிக்கை தொடர்பாக, கருத்து எதையும் வெளியிடுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், செஞ்சிலுவைச் சங்கத்திடம், ஆயிரம் சடலப் பைகள் கோரப்பட்டுள்ளதானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!