சாதாரண தர பரீட்சையில், 10,346 மாணவர்களுக்கு “9 ஏ”

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு இன்று மாலை வெளியாகியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசெம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை 4987 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது. இதன்போது 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றி இருந்ததாக பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்தப் பரீட்சையில், 10,346 மாணவர்கள், 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 73.84% மாணவர்கள உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். எனினும், கணிக பாடத்தில்,66.82% மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!