மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமுலா?…. – மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்

ஊரடங்குச்சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதே சிறந்தது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்காவில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகின்றது.

ஆனால் கொரோனா தொற்று தற்போது அதிகரித்துவருவதால் ஊரடங்கு தளர்த்தப்படுவதை விடுத்து மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதே சிறந்தது.

கடற்படையில் இருந்து சுமார் 800 சிப்பாய்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் 10 பேருடன் பழகி இருந்தாலும் மொத்தமாக 8000 பேர்வரை பழகியவர்கள் வட்டாரம் இருக்கும்.

எனவே அவற்றை தேடி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்களை வீட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும்.

கடற்படை சிப்பாய் ஒருவர் 200 பேருடன் பழகியதாக கேள்விப்படுகிறேன். இன்னொருவர் அநுராதபுரம் நொச்சியாகமவில் ஊருக்கே உரம் விநியோகித்துள்ளார். அவரது தந்தை கமநல உத்தியோகத்தர் என்பதால் இது நடந்துள்ளது.

எனவே நாங்கள் இவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சுகாதார பாதுகாப்புக்களை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!