அமெரிக்காவில் இறுதிச்சடங்கு மையத்திலிருந்து வந்த துர்நாற்றம்: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புரூக்ளினில் இறுதிச்சடங்கு மையம் ஒன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. புகார்களின் பேரில் அந்த இறுதிச்சடங்கு மையத்திற்கு சென்ற பொலிசார் அந்த மையத்தின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ட்ரக்குகளிலிருந்து அந்த துர்நாற்றம் வீசுவதை அறிந்துள்ளனர். ட்ரக்குகளைத் திறந்தபோது, அவற்றில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த உடல்கள் அழுகத்தொடங்கியதால் அந்த துர்நாற்றம் வீசுவதை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

ஒரு ட்ரக்கில் சுமார் 50 உடல்கள் வீதம், இரண்டு ட்ரக்குகளிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் இவ்வாறு அழுகத்தொடங்கிய நிலையில் இருப்பதை பொலிசார் கண்டுள்ளனர். நியூயார்க்கில் கொரோனா தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பெருகத்தொடங்கியதைத் தொடர்ந்து, இறுதிச் சடங்கு மையங்களில் உடல்கள் குவியத்தொடங்கியுள்ளன. அந்த இறுதிச்சடங்கு மையத்தின் உரிமையாளர், தங்கள் மையத்திலுள்ள குளிர் சாதனக் கருவிகள் செயலிழந்துவிட்டதால், அடக்கத்துக்காக வந்த உடல்களை ட்ரக்குகளில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!