இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கு அமைச்சரவை அனுமதி!

வெளிநாடுகளுக்குச் செல்லும், இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஸ் பத்திர கருத்து தெரிவிக்கையில்,

தற்போது மக்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ள முடியாது உள்ளது. எனினும் இன்னும் சில காலங்களில் மீண்டும் உலகம் முழுதும் வழமைக்கு திரும்பும்.

ஏற்கனவே எமது அரசாங்கம் தீர்மானம் எடுத்தமைக்கு அமைய இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் ஒன்றிணைப்பில் இவ்வாறான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

எனவே விரைவில் இலத்திரனியல் கடவுச்சீட்டை மக்கள் பாவனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!