முன்னாள் எம்.பிக்களுக்கான பிரதமரின் கூட்டம் இன்று!

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஏற்பாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!