பாதிப் பேருக்கு அறிகுறி இல்லை – ஆபத்து என்கிறார் சுகாதார அமைச்சர்

இலங்கையின் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளில், பாதிப் பேருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களிடமிருந்து நோய் பரவும் ஆபத்து அதிகம் உள்ளதாகவும், எனவே, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, எந்த அலுவலகத்திற்குள்ளேயும், ,செல்வதற்கு முன்னர் கைகளை கழுவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!