கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன பேராசிரியர் சுட்டுக்கொலை!

கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியரா பணியாற்றி வரும் டாக்டர் பிங் லியு, கொரோனா தொடர்பான மிக முக்கியமான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முனைப்பில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

டாக்டர் பிங் லியு அவரது வீட்டில் தலை, கழுத்து, உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்று ரோஸ் காவல் துறை தெரிவித்துள்ளது. லியுவை வீட்டில் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபர் அவரது காரில் இறந்து கிடந்துள்ளார். லியுவை கொன்ற அந்த நபர் தனது காருக்கு திரும்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என பொலிசார் நம்புகிறார்கள், ஆனால், லியு சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் குறிவைக்கப்பட்டதாக காட்டும் எந்த ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவிட் -19 க்குக் கீழான செல்லுலார் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள அவர் பணியாற்றி வந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!